சிராஜ் அவுட் கேட்க... மறுபக்கம் பாண்ட் மறுக்க! இந்தியாவுக்கு திருப்புமுனையாக அமைந்த மலான் விக்கெட் வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டெவிட் மலான் அவுட் ஆகி வெளியேறும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா முதல் இன்னிங்ஸில் 78 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க, அதன் பின் ஆடிய இங்கிலாந்து அணியில் துவக்க வீரர்களான Rory Joseph Burns(61) மற்றும் Haseeb Hameed(68) ஓட்டங்கள் குவிக்க, இதைத் தொடர்ந்து அணியின் தலைவர் ஜோ ரூட் சிறப்பாக சதம் அடித்து 121 ஓட்டங்கள் டேவிட் மலான் 70 ஓட்டங்கள், ஜானி பேர்ஸ்டோவ் 43 பந்தில் 29 ஓட்டங்கள் என வந்த வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை கொடுத்ததால், இங்கிலாந்து அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ஓட்டங்கள் குவித்து ஆடி வருகிறது.
இங்கிலாந்து அணியை விட 345 ஓட்டங்கள் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணிக்கு தன்னுடைய சிறப்பான பேட்டிங் மூலம் பெரும் தலைவலி கொடுத்து வந்த டேவிட் மலான் எதிர்பார்த வகையில் அவுட் ஆகி வெளியேறும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், சிராஜ் வீசிய ஓவரின் லெக் திசையில் போடப்பட்ட பந்தை, மலான் அதே லெக் திசையில் அடித்து ஆட முற்பட்டார். ஆனால், பந்தானது விக்கெட் கீப்பரிடம் சென்றுவிட்டது.
And Siraj gets David Malan just before the tea ?#INDvsEND #INDvENG #TeamIndia #ViratKohli #malan #Siraj #IndianCricketTeam pic.twitter.com/VzMxU1b7i1
— SportsCafe (@IndiaSportscafe) August 26, 2021
உடனே சிராஜ் பேட்டில் பட்டது போன்று அவுட் கேட்க, அதற்கு பாண்ட் உடனடியாக ஒன்று தெரியவில்லை என்பது போல் செய்கை செய்தார். அதன் பின் கோஹ்லி இருவரிடமும் கேட்ட போது, சிராஜ் உறுதியாக பேட்டில் பட்டது போன்று சொன்னார்.
இருப்பினும் பாண்ட் டவுட் என்று சொல்ல, இரு மனதாக கோஹ்லி வேறு வழியின்றி ரிவ்யூ எடுத்தார். அது அதிர்ஷ்டவசமாக பேட்டில் பட்டு செல்ல இந்திய வீரர்கள் குஷியாகிவிட்டனர்.
ஏனெனில் ஜோ ரூட் மற்றும் மலான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இவர்களை வெளியேற்ற முடியாமல் திணறிக் கொண்டிருந்த போது, சும்மா ஒரு குத்து மதிப்பாக அவுட் கேட்க, அது அவுட் என்பது உறுதியானதால், அடுத்தடுத்து வந்த வீரர்களை இந்திய வெளியேற்றியதால், இது ஆட்டத்தின் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்பட்டது.