விராட் கோலி கருத்தால் மைதானத்தில் பூத்த புன்னகை: வைரல் ஆகும் ரன் அவுட் காட்சிகள்!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியின் மத்தியில் விராட் கோலி தெரிவித்த கருத்து கிரிக்கெட் ரசிகர்களை ரசிக்கவைத்துள்ளது.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
Virat Kohli to Pollard when he was trying to run out Rohit in a funny way.
— Cricket Holic (@theCricketHolic) February 18, 2022
"YOU CAN'T RUN HIM LIKE THAT POLLY" pic.twitter.com/XasccpaEe5
ஆட்டத்தின் நடுவில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் சேஸ் 8வது ஓவரை பந்துவீசவே அந்த ஓவரின் மூன்றாவது பந்தை கோலி வேகமாக அடித்து ரன் எடுக்கும் முயற்சியில் இறங்கினர்.
ஆனால் அந்த பந்து ரோஹித் சர்மா மீது பட்டு பௌலர் கைக்கே செல்ல அவரை ரன் அவுட் செய்ய பௌலரூம், மிட் விக்கெட் திசையில் ஃபீல்டிங் நின்ற பொல்லார்டும், முயற்சிக்க அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் இதனைக் கண்ட கோலி, பொல்லார்ட்டிடம், ரோஹித்தை அவ்வளவு எளிதில் ரன் அவுட் செய்து விட முடியாது போலி (பொல்லார்ட்) என நகைச்சுவையாக தெரிவிக்கவே, ரோஹிவும், பொல்லார்ட்டும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.
இந்த நிலையில் கோலி தெரிவித்த இந்த கருத்து அங்குள்ள மைக் ஆடியோவில் பதிவாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.