சந்திரமுகியாக மாறிய கோலியை அப்போது தான் பார்த்தேன்! பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து பேசிய அஸ்வின்
கோலி என்னிடம் தூக்கி அடிக்குமாறு கூறினார் என அஷ்வின் தெரிவித்துள்ளார்
45 பந்துகளுக்கு பிறகு சந்திரமுகி போல கோலி மாறியதை பார்த்ததாக அஷ்வின் கூறியுள்ளார்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி கட்டத்தில் சந்திரமுகியை போல் கோலி மாறியதை பார்த்ததாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
கடந்த 23ஆம் திகதி மெல்போர்னில் நடந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அந்தப் போட்டியில் விராட் கோலி 82 ஓட்டங்கள் விளாசினார்.
கடைசி இரண்டு பந்துகளில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது களத்தில் இருந்த அஸ்வின் ஒரு வைடு பெற்று, ஒரு ரன் அடித்து வெற்றி பெற வைத்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலி விளையாடியது குறித்து அஸ்வின் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.
அதில், 'விராட் கோலிக்குள்ளே என்ன பூந்துச்சுன்னு தெரியல. ஏதோ பூந்துடுச்சி சாத்தியமா. அதுல ஒண்ணும் சந்தேகமே கிடையாது. 45 பந்துக்கு அப்புறம் எல்லாம், சந்திரமுகி படத்துல கங்கா மாறுவது போல் கோலி மாறியிருந்தார்.
அவர் கண்களை விரைத்துக் கொண்டு, நான் துடுப்பாட செல்லும்போது அங்கே அடி, இங்கே அடி என்று கூறினார். நான் களத்திற்கு வந்ததும் கோலியிடம் சில கேள்விகளை கேட்டேன். பந்துவீச்சாளர் எப்படி பந்துவீசுகிறார் என்று. அவன் காலுக்கு தான் வீசுறான் தூக்கி அடி என்று கூறினார் ' என தெரிவித்துள்ளார்.
AFP