சிக்ஸர் அடித்து சதம்! அதிர்ந்த மைதானம்..மகிழ்ச்சியில் திளைத்த கோலி வீடியோ
விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ருத்ர தாண்டவம் ஆடிய கோலி
சிக்ஸர் விளாசி சதமடித்ததை கொண்டாடி வரும் கோலி ரசிகர்கள்
விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 71வது சதம் விளாசியதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி அதிரடியாக சதம் விளாசினார்.
கோலி 94 ஓட்டங்களில் சிக்ஸர் அடித்து சதத்தை எட்டினார். இது அவருக்கு 43வது ஒருநாள் சதம் ஆகும். ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 71வது சதம் ஆகும். தொடர்ந்து அதிரடி காட்டிய கோலி 61 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 122 ஓட்டங்கள் எடுத்தார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கோலி சதம் அடித்துள்ளார். எனவே அவரது ரசிகர்களுக்கு அவரது ஆட்டம் விருந்தாக அமைந்தது. கோலி அடித்த ஒவ்வொரு சிக்ஸர், பவுண்டரிக்கும் ரசிகர்களின் கோஷத்தால் மைதானம் அதிர்ந்தது.
The milestone we'd all been waiting for and here it is!
— BCCI (@BCCI) September 8, 2022
71st International Century for @imVkohli ??#AsiaCup2022 #INDvAFGpic.twitter.com/hnjA953zg9
இதற்கு முன்பு கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்த கோலி சதம் அடித்தவுடன் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மகிழ்ச்சில் சிரித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.