தோல்விக்கு பின் அப்படியே உடைந்து போய் வந்த RCB வீரர்கள்! டிரஸிங் ரூமில் நடந்தது என்ன? வெளியான வீடியோ
கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தின் தோல்விக்கு பின் பெங்களூரு அணி வீரர்கள் அப்படியே உடைந்து போய் வந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
நேற்றை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில், பெங்களூரு அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது. தோல்விக்கு பின் வந்த பெங்களூரு வீரர்கள் டிரஸிங் ரூமில் அப்படியே உடைந்து போய் எதுவும் பேசாமல் வந்து உட்கார்ந்தனர்.
அப்போது அணி வீரர்கள் அனைவரிடமும் பேசிய கோலி, இந்த போட்டி நடந்து முடிந்துவிட்டது. நடந்ததை ஏற்றுக் கொண்டு நாம் முன்னேறி செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
Game Day: KKR v RCB Dressing Room Talk
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 21, 2021
Mike Hesson and Virat Kohli address the team after a forgettable outing, urge them to put this loss behind them & turn up better for the next game v CSK on 24th. All this & more on @myntra presents Game Day.#PlayBold #IPL2021 #KKRvRCB pic.twitter.com/6bB0LcfSe3
இதை நாம் உடனடியாக ஏற்றுக் கொள்வது நல்லது, விளையாட்டில் இது போன்று சில கட்டங்களில் நடக்கும். நாம் அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
எனவே நாம் மீண்டும் சிறப்பாக எல்லா வழிகளிலும் செயல்பட வேண்டும் என்றால், ஒரு குழுவாக நாம் சமநிலையுடன் இருந்தால் மட்டுமே அது நடக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவை பெங்களூரு அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், இப்போட்டியில் ஐபிஎல் தொடரில் கோலி விளையாடும் 200-வது போட்டி என்பதால், டிவில்லியர்ஸ் அவருக்கு சிறப்பு 200 எண் கொண்ட ஜெர்சியை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.