ஆட்டத்தின் முதல் பந்திலேயே கோலி அவுட்! இணையத்தில் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
கோலி டக் அவுட்
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்கிய 32வது ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி கேப்டன் விராட் கோலியும், ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
Boult lightning at Chinnaswamy! ⚡️#RCBvsRR #Boult #IPL2023 pic.twitter.com/Bf2DsdJHnc
— OneCricket (@OneCricketApp) April 23, 2023
சொந்த மைதானத்தில் களமிறங்குவதால் மிரட்டலான ஆட்டத்தை கோலி வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் பந்திலேயே கோலி LBW முறையில் ஆட்டமிழந்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், கோலி மீது வெறுப்படைந்தனர்.
விளாசும் ரசிகர்கள்
இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கோலியை கிண்டல் செய்து ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் பார்ட்னர்ஷிப் அமைத்த டு பிளெஸ்ஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ருத்ர தாண்டவம் ஆடி வருகின்றனர். RCB அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
@BCCI
23rd April - A day to forget for Virat Kohli.
— CricTracker (@Cricketracker) April 23, 2023
?: IPL#ViratKohli #TrentBoult #RCBvsRR pic.twitter.com/tyxVr7ciwy