கோஹ்லியை அசால்ட்டாக தட்டி தூக்கிய ஆண்டர்சன்! முதல் பந்திலே டக் அவுட் ஆக்கி வெளியேறும் வீடியோ
இந்திய அணியின் கேப்டன் ஆன விராட் கோஹ்லியை, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் டக் அவுட் ஆக்கி வெளியேற்றும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி, டிரண்ட் ப்ரிட்ஜில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 183 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்க, அடுத்து ஆடிய இந்திய அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
Anderson gets Kohli with that nagging 5th stump line yet again!
— OneCricket (@OneCricketApp) August 5, 2021
The English great cannot be stopped!!
Virat stands in disbelief!
The game is right in the balance !!#ENGvIND #ENGvsIND #Anderson #Kohlipic.twitter.com/Lj78EPId7K
இந்நிலையில், இப்போட்டியில் வழக்கம் போல் ஆண்டர்சன் தன்னுடைய சிறப்பான பந்து வீச்சின் மூலம் அவுட்டாக்கினார். ஆனால், இந்த முறை வந்த முதல் பந்திலே கோஹ்லியை ஆண்டர்சன் கோல்டன் டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 183 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனதால், கோஹ்லியின் விக்கெட்டை எடுத்தவுடன், ஆண்டர்சன் தன்னுடைய ஆக்ரோஷத்தை அதில் காட்டினார்.
மேலும், கோஹ்லி இதற்கு முன் கடந்த 2018-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் முதல் பந்திலும், அதே போன்று 2019-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான ஆட்டத்திலும், தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்திலும் என மூன்று முறை தான் சந்தித்த முதல் பந்திலே கோல்டன் டக் அவுட் ஆன இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.