அரைசதம் அடித்து மகளுக்கு அர்பணித்த கோலி! வைரலாகும் வீடியோ
இந்திய அணியின் நட்சத்திர வீரரான கோலி, தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான போட்டியில் அரைசதம் அடித்து அதை தனது மகளுக்காக அர்பணித்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான கோலி 84 பந்தில் 65 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோலி அரைசதம் அடித்த போது, அவருடைய மனைவி அனுஷ்கா குழந்தையுடன் வந்து அந்த மகிழ்ச்சியை கேலரியில் இருந்த படி வெளிப்படுத்தினார்.
அப்போது, கோலி இந்த அரைசதத்தை குழந்தைக்காக அர்பணிப்பது போன்று செய்கை செய்தார். இந்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
She is soo soo cute?❤️
— Ananya Sharma (@Theananyasharma) January 23, 2022
This one is for the baby❤️#ViratKohli #vamika #INDvsSAF pic.twitter.com/IyEvvSicqd