கோலி அப்படி கேட்கவே இல்லை! வைரலாகும் செய்திக்கு பிசிசிஐ அதிகாரி விளக்கம்
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனான கோலி, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலக வுள்ளதாக செய்தி வெளியான நிலையில், அது குறித்து பிசிசி உயர் அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு இந்த மாதம்(டிசம்பர்-2021) இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதற்கான ஒருநாள் கேப்டனாக ரோகித்சர்மாவும், டெஸ்ட் கேப்டனாக விராட் கோலியும் இந்திய அணியை வழிநடத்தவுள்ளனர்.
ஆனால், கோலிக்கு தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருக்க வேண்டும் என்பது விருப்பம், ஆனால் பிசிசிஐ திடீரென்று ரோகித்சர்மாவை ஒருநாள் கேப்டனாக அறிவித்ததால், இது அணியில் பெரி பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாகவே ரோகித்சர்மா டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் கோலியும் தற்போது ஒருநாள் தொடரில் பங்கேற்வில்லை, தன்னுடைய குழந்தையின் முதல் பிறந்தநாள்(ஜனவரி மாதம் 11-ஆம் திகதி 2022) வரவுள்ளதால், அதற்காக குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அவர் பிசிசிஐ-யிடம் இது குறித்து கேட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது.
இதனால் ரோகித் கேப்டன் என்பதாலே கோலி விளையாடவில்லை, இந்திய அணியில் ஏதோ ஒரு பெரிய பிரச்சனை என்று செய்தி வெளியான நிலையில், பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு இது குறித்து கூறுகையில், தற்போதைக்கு கோலி, பிசிசிஐ தலைவர் கங்குலியிடமோ அல்லது செயலாளர் ஜெய் ஷாவிடமோ ஒருநாள் போட்டியில் இருந்து விலகுவது குறித்து எந்த ஒரு கோரிக்கையும் அனுப்பவில்லை.
தற்போதைய, அதாவது இன்றைய 14-ஆம் திகதி நிலவரப்படி அவர் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது உறுதியாகவுள்ளது. ஆனால், அதே சமயம் இதன் பின் ஏதேனும் நடந்தால் மாற்றம் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.