விராட் கோலி 75வது சதம் விளாசல்! சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தனது 75வது சதத்தை பதிவு செய்தார்.
கோலி நிதான ஆட்டம்
அகமதாபாத்தில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா 35 ஓட்டங்களும், புஜாரா 42 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
சதம் விளாசிய கில் 128 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜடேஜா 28 ஓட்டங்களில் வெளியேற, ஸ்ரீகர் பரத் 44 ஓட்டங்கள் எடுத்து லயன் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
எனினும் நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை அடித்தார்.
CENTURY for @imVkohli ??
— BCCI (@BCCI) March 12, 2023
He's battled the heat out here and comes on top with a fine ?, his 28th in Test cricket. #INDvAUS #TeamIndia pic.twitter.com/i1nRm6syqc
75 சதங்கள்
இதற்காக 240 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 பவுண்டர்களை மட்டுமே விரட்டினார். சர்வதேச அளவில் இது அவருக்கு 75வது சதம் ஆகும். இதன்மூலம் 75 சதங்கள் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார்.
சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவர் டெஸ்டில் 51 சதங்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களும் அடித்துள்ளார். கோலி டெஸ்டில் 28 சதங்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 46 சதங்களும், டி20யில் ஒரு சதமும் அடித்துள்ளார்.