விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கோலி.. அரைசதம் விளாசி அசத்தல்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்து மிரட்டியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மும்பையின் பிரபோர்ன் மைதானத்தில் நடந்து வருகிறது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தெரிவு செய்து களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கோலி மற்றும் பட்டிட்டார் களமிறங்கினர்.
நிதானமாக ஆட துவங்கிய அவர்கள், நல்ல பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பவும் தவறவில்லை. குறிப்பாக விராட் கோலி பொறுப்புடன் ஆடினார். சிறப்பாக விளையாடிய அவர், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அரைசதம் அடித்தார். இது அவருக்கு 43வது ஐபிஎல் அரைசதம் ஆகும்.
மறுமுனையில் அதிரடி காட்டிய பட்டிட்டார் 32 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது வரை பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்கள் எடுத்துள்ளது.