CSK உடனான போட்டியில் தோற்ற சோகத்திலும் கோலி செய்த செயல்! எங்க அணிக்கு வந்துடுங்க என உருகிய சென்னை ரசிகர்கள்.. புகைப்படம்
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின்னர் சோகத்திலும் பெங்களூர் அணி தலைவர் கோலி செய்த செயல் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் 35-வது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு வந்தது.
இந்த நிலையில் போட்டி முடிந்தபின், சிஎஸ்கே கேப்டன் தோனி சக வீரர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
யோவ்வ் @imVkohli பேசாம நீ எங்க டீம்க்கு வந்துருயா ? எங்க தலைவன் மேலே நாங்க வெச்சுருக்குற மாறியே நியும் அம்புட்டு பாசமா இருக்க எங்களுக்கே டஃப் குடுத்துட்டு இருக்க யா நீ ?? #Mahirat #Dhoni #viratkholi @ChennaiIPL pic.twitter.com/1IRGZdzgGe
— C.H.A.R.L.I.E ? (@introvert_twitz) September 24, 2021
அப்போது வந்த விராட் கோலி, தோனியை பின்னால் இருந்து கட்டிப்பிடித்தார். இதனை அடுத்து இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.
போட்டியில் தோல்வி அடைந்த சோகம் இருந்தாலும், கோலியின் இந்த செயல் சிஎஸ்கே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
தோனி மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் நீங்கள் பேசாமல் சிஎஸ்கே அணிக்கு வந்துவிடுங்கள் எனவும் கோலி, தோனி நட்பு எப்போதும் ஸ்பெஷல் எனவும் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
Pic of the day virat hugged his Mahi bhai #mahirat moment at its best ? #viratkohli #MsDhoni #dhoni #virat #viratkohli #MsDhoni #RCBvsCSK #CSKvsRCB pic.twitter.com/ItkjmbCBEw
— Mahi And Virat Fc (@Mahirat_718_) September 24, 2021