மேக்ஸ்வேலை அவுட்டாக்க... கோஹ்லி கொடுத்த டிப்ஸ்! போல்டாகி வெளியேறிய வீடியோ
இந்திய அணிக்கெதிரான பயிற்சி போட்டியில் அடித்து நொறுக்கி வந்த மேக்ஸ்வேல் அவுட் ஆகி வெளியேறும் வீடியோ காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில், வரும் 23-ஆம் திகதி முதல் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது.
இதற்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான மேக்ஸ்வேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
குறிப்பாக சுழற்பந்து வீச்சாளரான ராகுல் சஹார் ஓவரில், ரிவர்ஸ் சுவிப் மூலம் பவுண்டரி பறக்கவிட்டார். இதனால் உடனே வந்த கோலி, அவருக்கு சில அறிவுரைகளை கூறினார்.
அதன் பின் அடுத்த சில பந்துகளிலே மேக்ஸ்வேல்(28 பந்தில் 37 ஓட்டங்கள்) போல்டாகி வெளியேறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக கோலி மற்றும் மேக்ஸ்வேல் இருவரும் ஒன்றாக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.