சொதப்பிய மும்பை வீரரிடம் தனியாக அழைத்து பேசிய கோலி! வைரலாகும் புகைப்படம்: நெகிழ்ச்சியில் ரசிகர்கள்
மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பின், பெங்களூரு அணியின் தலைவரான கோலி, இஷான் கிஷனை அழைத்து பேசிய புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் சென்னை அணியும், இரண்டாம் ஆட்டத்தில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றது. இதில் தோல்விக்கு பின் மும்பை அணியின் முக்கிய வீரரான இஷான் கிஷான் ஒரு வேதனையிலே இருந்தார்.
ஏனெனில், இந்த ஐபிஎல் தொடரில் அவர் இதுவரை சிறப்பான ஆட்டத்தை கொடுக்கவில்லை, அதுமட்டுமின்றி வரும் உலகக்கோப்பை தொடரிலும் அவர் இருப்பதால், அவருக்கு தொடர்ந்து அழுத்தம் உருவாகியுள்ளது.
Ishu almost cried ? pic.twitter.com/82LUj7GVcg
— Neil? (@RohitsBoy) September 26, 2021
ஒருவேளை இந்த ஐபிஎல்லில் சரியாக விளையாடவில்லை என்றால், அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது கஷ்டம்.
இந்நிலையில், ஒரு வித குழப்பத்தில் இருந்த இஷான் கிஷனிடம், பெங்களூரு அணியின் தலைவரும், இந்திய அணியின் தலைவருமான கோலி அழைத்து பேசினார். அப்போது அவருக்கு சில ஆலோசனைகளை கோலி கூறியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகைப்படங்க்ள் இணையத்தில் அதிக் அளவில் பகிரப்பட்டு வருகிறது.