கோலிக்காக இந்திய அணியிலிருந்து நீக்கப்படவிருக்கும் நட்சத்திரம் யார்? கசிந்த தகவல்
மும்பை வான்கடேயில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் யாருக்கு பதிலாக விராட் கோலி களமிறங்குவார் என்பது தொடர்பில் தகவல் கசிந்திந்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என இந்தியாவிடம் ஒயிட் வாஷ் ஆனது.
இதைத்தொடர்ந்து கான்பூரில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது.
இரு அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை டிசம்பர் 3ம் திகதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்க இருக்கிறது.
டி20 உலகக் கோப்பையை தொடர்ந்து ஓய்வளிக்கப்பட்ட கோலி, நாளை நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணி கேப்டனாக களமிறங்க இருக்கிறார்.
இதானல், கோலிக்காக இந்திய அணி பிளேயிங் லெவனிலிருந்து யார் நீக்கப்படுவார் என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் புஜாராவுக்கு பதிலாக விராட் கோலி களமிறங்க வாய்ப்புள்ளதாக Cricbuzz தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, விக்கெட் கீப்பர் கேஎஸ் பாரத் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும், அதேசமயம், இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக முகமது சிராஜ் களமிறங்குவார் என Cricbuzz தெரிவித்துள்ளது.