11 முறை தொடர்ச்சியான 2 சதம் - யாரும் நெருங்க முடியாத சாதனையை படைத்த கோலி
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில், சதமடித்ததன் மூலம் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
சதமடித்த விராட் கோலி
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 வது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 358 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இதில், விராட் கோலியும்(102), ருத்துராஜ் கெய்க்வாட்டும்(105) அதிரடியாக ஆடி சதமடித்தனர்.
93 பந்துகளில், 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 102 ஓட்டங்கள் எடுத்த விராட் கோலி, இதன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
விராட் கோலியின் சாதனைகள்
இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக அனைத்து வடிவ போட்டிகளிலும் அதிக 50+ ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.

25 முறை 50+ ஓட்டங்களுடன் சச்சின் முதலிடத்தில் இருந்தார். தற்போது கோலி 26 முறை எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
ஒரு நாள் போட்டிகளில் 15 முறை தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 50+ ஓட்டங்கள் எடுத்து ரிக்கி பாண்டிங் மற்றும் குமார் சங்கக்காரவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
மேலும், 11வது முறையாக தொடர்ச்சியாக 2 ஒருநாள் போட்டிகளில் சதமடித்து யாரும் நெருங்க முடியாத சாதனையை கோலி படைத்துள்ளார்.

6 முறை தொடர்ச்சியாக 2 ஒருநாள் போட்டிகளில் சதமடித்தது தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் பாபர் அசாம் 2வது இடத்தில் உள்ளனர்.
ரோஹித் சர்மா, குமார் சங்கக்கார, சயீத் அன்வர் 5முறை இந்த தொடர்ச்சியாக 2 ஒருநாள் போட்டிகளில் சதமடித்துள்ளனர்.
மேலும், வேறு வேறு அதிக மைதானங்களில் சதமடித்த வீரர்களின் பட்டியலில் சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார். சச்சினும் கோலியும் 34 மைதானங்களில் சதமடித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |