அதிரடி ஆட்டம், மிரட்டலான சாதனை படைத்த விராட் கோலி!
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் கோலி 44 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் விளாசினார்
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி 98 சிக்ஸர்கள் மற்றும் 307 பவுண்டரிகள் விளாசியுள்ளார்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
ஆசியக் கோப்பையில் நேற்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்கள் குவித்தது. விராட் கோலி 60 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் ஆடிய பாகிஸ்தான் 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
PC: AFP
விராட் கோலிக்கு இந்த அரைசதம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 32வது அரைசதம் ஆகும். இதன்மூலம் அவர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
ரோகித் சர்மா அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை வைத்திருந்தார். அவர் 135 போட்டிகளில் 31 அரைசதம் விளாசியிருந்த நிலையில், கோலி 102 போட்டிகளில் 32 அரைசதம் விளாசியுள்ளார்.
PC: AP Image
இந்தப் பட்டியலில் பாபர் அசாம் (27) மூன்றாவது இடத்திலும், டேவிட் வார்னர் (23) 4வது இடத்திலும், மார்ட்டின் கப்தில் (22) 5வது இடத்திலும் உள்ளனர்.