இந்திய அணி புதிய கேப்டன் ரோகித் சர்மா - கோலி இடையே புகைச்சலா? வெளியான விளக்கம்
விராட் கோலி - ரோகித் சர்மா இடையே புகைச்சல் உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அது குறித்து விளக்கமளிக்கப்ட்டுள்ளது.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுபயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் ஒருநாள் தொடரில் விராட் கோலி விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம் அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா - விராட் கோலி இடையே ஏற்பட்ட புகைச்சல் தான் என சமூகவலைதளங்களில் கருத்து பகிரப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள பிசிசிஐ அதிகாரி, ஐபிஎல், டி20 உலகக்கோப்பை என பல மாதங்கள் தொடர்ந்து விளையாடி வருவதால் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் நோக்கில் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடமாட்டார் என எங்களிடம் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம், ரோகித்துக்கும் கோலிக்கும் இடையில் எதுவும் பிரச்சினை இல்லை என கூறியுள்ளார்.