அஸ்வினுக்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படுமா? கோலி சொல்லும் காரணம்
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு கோஹ்லி விளக்கம் அளித்துள்ளார்.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண இந்திய அணி அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் உள்ளன.
இந்நிலையில், நான்காவது ஒருநாள் போட்டி, வரும் 2-ஆம் திகதி நடைபெறவுள்ளதால், இந்த போட்டியிலாவாது அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அது குறித்து கோலி கூறுகையில், ஆடுகளத்தின் தன்மையை வைத்தே ஆடும் லெவன் தேர்வு செய்யப்படும். நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கும் ஓவல் ஆடுகளத்தின் தன்மை கருத்தில் கொண்டு தான் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை எடுக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வோம்.
இது குறித்து ஆடுகளத்தின் தன்மையை கண்டறிந்த பின்னர் தான் ஆலோசனை செய்வோம்.
நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடி வருவது எங்களுக்கு பயனுள்ளதாக தான் உள்ளது. அணியின் தேவையே பொறுத்தே ஆடும் லெவனும் தேர்வு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.