கோலியின் திட்டமிட்ட சதி இது! அஸ்வினை மீண்டும்... மீண்டும் எடுக்காததற்கு இதுவே காரணம்? ரசிகர்கள் வெளியிடும் புள்ளி விவரம்
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் பிளேயிங் லெவனைப் பார்த்து இந்திய ரசிகர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடி வரும் இந்திய அணி சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. இந்நிலையில், இப்போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அணியில் சேர்க்கப்படவில்லை.
முதல் மூன்று போட்டிகளிலும் அஸ்வின் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அவரை மீண்டும் கோலி அணியில் எடுக்காமல் விட்ட கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம், அவரின் தனிப்பட்ட வெறுப்பு தான், நல்ல வேளை அவர் அவுஸ்திரேலியாவிற்கான டூரில் இருந்து இடையில் விலகிவிட்டார். இல்லையென்றால் அவுஸ்திரேலியா டூரிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது என்று ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், இங்கிலாந்து கண்டிசனில் அஸ்வின் ஒரு எப்படிப்பட்ட பந்து வீச்சாளர் என்பது தொடர்பான புள்ளிவிவரங்களை பதிவிட்டு, கோலிக்கு டேக் செய்து வருகின்றனர்.