நீங்கள் விரும்பியதை செய்வதில் மூழ்கி இருந்தால்.. தீவிர பயிற்சியில் கோலி!
டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான போட்டிக்கு தயாராகும் வகையில் விராட் கோலி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடடைந்தது. 217 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணியில், விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இன்று நடக்கவிருக்கும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பெங்களூரு எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற கோலி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் வலை பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கோலி, அதனுடன் 'நீங்கள் விரும்பியதைச் செய்வதன் மகிழ்ச்சியில் மூழ்கி இருந்தால், மற்ற அனைத்தும் பொருத்தமற்றவை தான்' என குறிப்பிட்டுள்ளார்.
If you're immersed in the joy of doing what you love, everything else is irrelevant. ❤️? pic.twitter.com/Wc0DJvg4gm
— Virat Kohli (@imVkohli) April 15, 2022