கிரிக்கெட் உலகமே எதிர்பார்க்கும் போட்டி.. பாகிஸ்தான் அணியை புகழ்ந்த விராட் கோலி
ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில், விராட் கோலி பாகிஸ்தானிய பந்துவீச்சை பாராட்டியுள்ளார்.
எதிர்பார்க்கும் போட்டி
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்கியுள்ளது.
Getty
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இலங்கையில் மோதும் போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சிறந்த ஃபார்மில் உள்ளதுடன், நேபாள அணிக்கு எதிராக 151 ஓட்டங்கள் எடுத்து மிரள வைத்தார்.
Getty Images
விராட் கோலி பாராட்டு
இதனால் இந்திய அணி மிகப்பெரிய சவாலை நாளை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்திய அணி வீரர் விராட் கோலி பாகிஸ்தான் அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'பந்துவீச்சினை அவர்களது (பாகிஸ்தான்) பலமாக உணர்கிறேன். மேலும், அவர்களின் திறமையின் அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய, சில உண்மையிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் பந்துவீச்சாளர்களை அவர்கள் பெற்றுள்ளனர்.
எனவே, நீங்கள் அவர்களை எதிர்கொள்ள உங்கள் முழு சிறந்த இருக்க வேண்டும். எனது ஆட்டத்தை எவ்வாறு சிறப்பாக செய்ய முடியும் என்பதை புரிந்துகொள்ள மட்டுமே முயற்சிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
PC: @ICC | X
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |