கோலி, ராகுல் அரைசதம்..அவுஸ்திரேலியாவுக்கு 241 ரன் இலக்கு
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 240 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
கோலி 54
அகமதாபாத்தில் நடந்து வரும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 240 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
சுப்மன் கில் (4), ஸ்ரேயாஸ் ஐயர் (4) சொதப்பிய நிலையில், ரோகித் சர்மா அதிரடியாக 47 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் விராட் கோலி 63 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்து கம்மின்ஸ் ஓவரில் போல்டு ஆனார்.
அடுத்து வந்த ஜடேஜா 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். எனினும் பொறுமையின் சிகரமாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தார். அவர் 107 பந்துகளில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து 66 ஓட்டங்கள் எடுத்தார். அவரை ஸ்டார்க் வெளியேற்றினார்.
ஸ்டார்க் 3 விக்கெட்டுகள்
அதனைத் தொடர்ந்து இந்திய அணி ஓட்டங்கள் எடுக்க தடுமாறியது. சூர்யகுமார் யாதவ் எவ்வளவோ முயன்றும் 18 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இறுதியில் குல்தீப் யாதவ் (10) கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். இதன்மூலம் அவுஸ்திரேலிய அணிக்கு 241 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |