கோலி கேப்டன் பதவியை விட்டு விலகவில்லை! யார் உங்களுக்கு சொன்னது? பிசிசிஐ கொடுத்த விளக்கம்
இந்திய அணியின் தலைவராக உள்ள கோஹ்லி, கேப்டன் பதவியில் இருந்து விலகவில்லை என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடருக்கு பின் கோலி, ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், அதன் பின் அணியை ரோகித் வழிநடத்தவுள்ளதாக செய்தி வெளியானது.
ஆனால், இதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ பொருளாளர் Arun Dhumal, இது முற்றிலும் பொய், இதெல்லாம் உங்களுக்கு யார் சொன்னது? இந்த விவகாரத்தைப் பற்றி பிசிசிஐ விவாதிக்கவோ, யாரையும் சந்திக்கவும் இல்லை.
அணியின் மூன்று வித போட்டிகளுக்கும் கோலியே கேப்டனாக இருப்பார் என்று கூறியுள்ளார். இதனால் கோலி கேப்டன் பதவி குறித்து பரவிய செய்திக்கு முற்றிப் புள்ளி வைத்துள்ளார்.