இப்படி இருந்தா எப்படி விளையாட முடியும்? கடும் கோபமடைந்த கோஹ்லி-ரோகித்: வெளியான வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது நான்காம் நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் கோஹ்லி மற்றும் ரோகித் கோபமடைந்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தில், ஆட்டம் முடிவதற்கு சில ஓவர்கள் இருந்த போது, இந்திய அணியில் ரிஷப் பாண்ட் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர்.
??? #ENGvIND pic.twitter.com/tuN5JhMyeW
— The Left Hander (@selva_cskian23) August 15, 2021
அப்போது, மைதானத்தில் இருக்கும் லைட் சரியாக எரியாத காரணத்தினால், போதிய வெளிச்சமின்றி, விளையாட அவர்கள் சிரமப்பட்டனர். ஆனால், ரிஷப் பாண்ட் இதைப் பற்றி நடுவர்களிடம் கூறாமல் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.
இதனால் அணி வீரர்கள் அமர்ந்திருக்கும் பால்கனியில் உட்கார்ந்திருந்த கோஹ்லி மற்றும் ரோகித் போதிய வெளிச்சம் இல்லாத போது எப்படி விளையாட முடியும் என்று கோபத்தை தங்களுடைய சைகை மூலம் வெளியேற்றினர்.
அந்த வீடியோவை இணையவாசிகள் டிரண்டாக்கி வருவதுடன், ஒரு மீம்ஸில், இருட்டா இருக்கும்லே எப்படி விளையாட முடியும் என்று கிண்டல் செய்யும் வகையிலும் பதிவிட்டு வருகின்றனர்.