வண்ணங்களில் மூழ்கிய கோலி, ரோகித்….பஸ்ஸில் ஹோலி கொண்டாடிய இந்திய அணி: வீடியோ
இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திரங்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் டீம் பஸ்ஸில் ஹோலி கொண்டாட்டங்களை நடத்தினர்.
இந்திய அணி வீரர்களின் ஹோலி கொண்டாட்டம்
பார்டர்-கவாஸ்கர் டிராபின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
இந்த போட்டி வியாழக்கிழமை அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது, மூன்று போட்டிகளில் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், அதில் இந்திய 2-1 என்ற வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் வண்ணமயமான ஹோலி பண்டிகைக்காக தயாராகி வரும் நிலையில், இந்திய அணியின் வீரர்களும் கொண்டாட்டங்களை தவறவிடாமல் பரஸ்பரம் மகிழ்ந்து வருகின்றனர்.
சுப்மன் கில் வீடியோ
அந்த வகையில் செவ்வாயன்று இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் சுப்மன் கில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அணியின் பஸ்ஸில் ஹோலி கொண்டாடுவதை காணலாம்.
மேலும் அந்த வீடியோவில் விராட் கோலி கலர் பூசப்பட்ட முகத்துடன் கேமரா முன் நடனமாடும் போது, ரோஹித் சர்மா அவரது முதுகு புறத்தில் இருந்து “குலால்”(gulaal) வீசுகிறார்.
சுப்மன் கில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.