கேட்ச் விட்டு கோலியை ரன் அவுட் ஆக்கி மிரட்டிய இளம் வீரர்! துல்லியமாக ஸ்டம்பை அடித்த வீடியோ
பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில், கோலியை துல்லியமாக ரன் அவுட் ஆக்கிய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
இதில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்தது. இதில் துவக்க வீரரான லிவிஸ் அரைசதம் அடித்து 58 ஓட்டங்களும், மற்றொரு துவக்க வீரரான ஜெய்ஸ்வால் 31 ஓட்டங்களும் அதிகபட்சமாக எடுத்தனர்.
— Sardar Khan (@SardarK07004661) September 29, 2021
இதையடுத்து இரண்டாவது பேட்டிங் ஆடி வரும் பெங்களூரு அணி சற்று முன் வரை 15.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 127 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இப்போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டன் ஆன விராட் கோலி 20 பந்தில் 25 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார். இவரை இயான் பராக் தன்னுடைய துல்லியமான் த்ரோ மூலம் ரன் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.
அதற்கு முன்பு தான், இயான் பராக் கோலிக்கு கேட்ச்சை விட்டிருந்தார், விட்ட கேட்சிற்கு பதிலாக ரன் அவுட் அதை சரி செய்து கொண்டார். பந்தை அடித்தவுடன் கோலி பீல்டரான இயான்பராக் பந்தை கீப்பருக்கு தான் வீசுவார் என்று பந்தை பார்த்துக் கொண்டே சென்றார்.
ஆனால், திடீரென்று இயான் பராக் கோலி அஜாக்கிரதையாக ஓடுவதைக் கண்டு, மின்னல் வேகத்தில் த்ரோ அடித்து ரன் அவுட் ஆக்கினார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.