அது எப்படி நடந்தது என்று தெரியவில்லை! பாகிஸ்தானுக்கு எதிராக விஸ்வரூபமெடுத்த விராட் கோலி
பாகிஸ்தானுக்கு எதிராக 82 ஓட்டங்கள் எடுத்த கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்
கடினமான சூழ்நிலையில் இருந்தபோது ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு கோலி நன்றி தெரிவித்துள்ளார்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தது குறித்து விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மெல்போர்னில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடிய விராட் கோலி ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 82 ஓட்டங்கள் விளாசினார். போட்டிக்கு பின்னர் பேசிய கோலி,
'இது கனவு போன்ற சூழ்நிலை. என்னிடம் பேச வார்த்தையில்லை. இது எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு தெரியவில்லை. நாம் கடைசி வரை களத்தில் இருப்போம் என்று ஹர்திக் பாண்ட்யா என்னிடம் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார். நான் வார்த்தைகளை இழந்துவிட்டேன்.
AFP
மொஹாலியில் 52 பந்துகளில் 82 ஓட்டங்கள் எடுத்தது தான் இன்றுவரை எனது சிறந்த இன்னிங்ஸ் என்று கூறி வந்தேன். ஆனால், தற்போது 53 பந்துகளில் 82 ஓட்டங்கள் எடுத்துள்ளேன். இரண்டுமே எனக்கு சிறப்பானது தான். இத்தனை மாதங்களாக நான் கஷ்டப்பட்டிருந்தபோது, நீங்கள் எனக்கு ஆதரவு கொடுத்தீர்கள். மிக்க நன்றி' என தெரிவித்துள்ளார்.
AFP