6 வருடத்திற்கு முன் கோலி சொன்னார்! இப்போது செய்து காட்டிவிட்டார்: புகழ்ந்து தள்ளிய ஆலன் டொனால்டு
தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆலண்ட் டொனால்டு இந்திய அணியின் கேப்டன் ஆன கோஹ்லியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இந்திய அணி 1-0 என்று முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு கோஹ்லி தன்னிடம் கூறிய சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு கோலி என்னிடம் வந்து பேசினார். அப்போது இந்திய அணியை நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக உருவாக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறினார்.
அதனை அவர் தற்போது செய்து காட்டி இருக்கிறார். மேலும் அவர் எதை நோக்கி செல்கிறார் ? எதற்காக விளையாடுகிறார் ? என்பதை நன்கு தெரிந்து இருக்கிறார்.
அது மட்டுமின்றி இந்திய அணியில் முழு உடல் தகுதியுடன் இருக்கும் வீரர்களை உருவாக்க வேண்டும் என்று கோலி நினைத்தார். அதன்படி தற்போது உலகிலேயே சிறந்த அணியாக இந்திய அணி திகழ்கிறது.
எந்த ஒரு அணியையும், உலகின் எந்த ஒரு நாட்டிலும் சந்தித்தாலும் அவர்களை தோற்கடிக்க கூடிய திறன் இந்திய அணிக்கு இருக்க வேண்டும் என நினைத்தார்.
உலகின் அனைத்து மைதானங்களிலும் பவுலிங்கில் மிகச் சிறந்த அணியாக இருக்க வேண்டும் என அவர் இந்திய அணியை நினைத்தார். கடந்த பல ஆண்டுகளாகவே அவரது சிறப்பான முயற்சியின் மூலம் தற்போது இந்திய அணி பலமாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளார்.