ரோகித்தை அணியில் இருந்து தூக்க முயற்சி செய்யும் கோஹ்லி? தேர்வு ஆலோசனை கூட்டத்தில் சொன்ன முக்கிய பாய்ண்ட்கள்
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தோல்விக்கு பிறகு, இந்திய டெஸ்ட் அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியஷில் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இதன் காரணமாக டெஸ்ட் அணியில் இனி முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக சீனியர்கள் வீரர் பலர் இனி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது கடினம் தான், அதில் ரோகித் சர்மாவின் பெயரும் இருக்கிறதாம். காரணம் அவருடைய வயது தானாம், 34 வயதாகும் ரோகித் சர்மா தற்போது தான் டெஸ்ட்டில் மிகுந்த கவனம் எடுத்து ஆடி வருகிறார்.
இந்நிலையில், அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரவுள்ளதால், இந்திய அணி தேர்வு குறித்து அணியின் கேப்டன், பயிற்சியாளர் ஆகியோரி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கோஹ்லி சில ஆலோசனைகளை முன்னெடுத்திருக்கிறார். அதாவது அவர் சொன்ன பாயிண்ட்கள் அனைத்தும் வீரர்களின் வயதை அடிப்படையாக வைத்து, தனது ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.
குறிப்பாக, ரோஹித் ஷர்மா குறித்து பேசும் போது, அவருக்கு இப்போது 34 வயதாகிவிட்டது. இப்போதுதான் டெஸ்ட் போட்டிகளில் சீரியஸ்னஸ் காட்டுகிறார். ஒருவேளை அவர் நல்லபடியாக பிக்கப் செய்து விளையாட தொடங்கினால் கூட, அவரால் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அணியில் விளையாட முடியும்?
அதுவும் கன்சிஸ்டன்ஸியோடு? என்பது தான் கோஹ்லி எழுப்பிய முதல் கேள்வியாக அமைந்திருக்கிறது. அவர் முன்வைத்த பாயிண்ட் ரோஹித்தின் பிட்னஸ். 10 வருடங்களுக்கு முன்பிருந்த ரோஹித்துக்கும் இப்போது உள்ள ரோஹித்துக்கும் பிட்னஸை பொறுத்தவரை நிறைய வித்தியாசம் உள்ளது.
எடை கூடியுள்ளார். மூச்சு வாங்குகிறார். விரைவாக இனி அவரால் ஓட முடியுமா? என்பது சந்தேகமே. ஸோ, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பார்த்தால், ரோஹித் இனி அணிக்கு தேவையா என்பதையே யோசிக்க வேண்டியிருக்கிறது என்று கோஹ்லி தன் கருத்தை கூறியுள்ளார்.
இருப்பினும் கோஹ்லியின் இந்த கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனாராம், பாதி கிணற்றை தாண்டி வந்த பிறகு, இப்போது ரோஹித் குறித்து கேள்வி எழுப்புவது சரியாக இருக்காது.
அவர் இன்னமும் சர்வதேச ஒருநாள், டி20 போட்டிகளில், அணியின் மேட்ச் வின்னராக இருக்கிறார். மிக முக்கியமாக கேப்டனுக்கு ஆலோசனை வழங்கும் இடத்திலும் இருக்கிறார்.
5 முறை அவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கோப்பையை வென்றிருக்கிறது. எனவே அவரது கேப்டன்ஷிப் எபிலிட்டி நமக்கு நிச்சயம் உதவும் என்று கூற, ஒரு கட்டத்தில் கோஹ்லி மீட்டிங்கை முடித்து கொள்வதாக கூறி சென்றுவிட்டாராம்.