அஸ்வினுக்கு இடமில்லை! மறைமுகமாக கூறிய இந்திய கேப்டன் கோஹ்லி
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அஸ்வினுக்கு இடம் இல்லை என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்திய அணி அஸ்வின் இல்லாமல், நான்கு வேகப்பந்து வீச்சாளர், ஒரு சுழற்பந்து விச்சாளர் ஜடேஜாவுடன் களமிறங்கியது.
இது குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இது ஒரு தவறான முடிவு என்று கூறி வந்தனர். ஆனால், இந்த அணி தான் இங்கிலாந்தை முதல் டெஸ்ட் போட்டியில் கதி கலங்க வைத்தது. இருப்பினும் மழை காரணமாக இந்தியாவின் வெற்றி பறிபோய்விட்டது.
இந்நிலையில், இந்த போட்டி முடிந்த பின்பு கோஹ்லி ஒரு விஷயத்தை கூறினார்.
அதில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது ஒரு வருத்தம் தான், அதே சமயம் இந்த தொடர் முழுவதுமே இதே போன்ற அணிதான் விளையாடும், அணியின் பலம் அறிந்து நாங்கள் இந்த விடயத்தை மாற்றியுள்ளோம் என்று கூறினார்.
அதாவது இங்கிலாந்து சூழ்நிலையில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் தான் இனி வரும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறோம் என்பதை கோஹ்லி இப்படி மறைமுகமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.