என்றும் நன்றியுடன் இருப்பேன்! இலங்கைக்கு எதிராக முதல்போட்டி..15 ஆண்டுகளை நிறைவு செய்த கோலி
சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
சாதனை நாயகன் கோலி
இமாலய சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கி வரும் விராட் கோலி, இன்று சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இந்த 15 ஆண்டுகளில் பல ஜாம்பவான்களின் சாதனைகளை தகர்த்துள்ள கோலி, தனது அறிமுக போட்டியில் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
2008ஆம் ஆண்டு தம்புலாவில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கோலி அறிமுகமானார்.
தொடக்க வீரராக கம்பீருடன் களமிறங்கிய அவர் கோலி 22 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்து குலசேகரா பந்துவீச்சில் அவுட் ஆனார்.
ஆனால், ஐந்து போட்டிகள் கொண்ட அந்த ஒருநாள் தொடரில் தனது முதல் அரைசதத்தை (4வது போட்டி) கோலி பதிவு செய்தார்.
நன்றி கூறிய கோலி
இந்நிலையில், 15 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி உள்ளவனாக இருப்பேன் என கோலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Forever grateful ? pic.twitter.com/cpxoUNS0uG
— Virat Kohli (@imVkohli) August 18, 2023
இதற்கிடையில் விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
BCCI
கோலி 111 டெஸ்ட்களில் 29 சதங்களுடன் 8,676 ஓட்டங்களும், 275 ஒருநாள் போட்டிகளில் 46 சதங்களுடன் 12,898 ஓட்டங்களும் எடுத்துள்ளார். அத்துடன் 115 டி20 போட்டிகளில் 4008 ஓட்டங்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |