இது வேற லெவல் பவுலிங் அஸ்வின்! தமிழில் உற்சாகப்படுத்திய கோஹ்லி: கமெராவில் சிக்கிய காட்சி
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி, அஸ்வினை தமிழில் உற்சாகப்படுத்திய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், கடந்த 13-ஆம் திகதி துவங்கியது.
இப்போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி, 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் நாயகனாக தமிழக வீரர் அஸ்வின விளங்கினார். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் சதம் என இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக விளங்கினார்.
?KOHLI: வேற லெவல்?வேற லெவல் Ash ?
— Star Sports Tamil (@StarSportsTamil) February 16, 2021
உண்மையாவே இது வேற லெவல் Video??
களத்தில் பந்துவீசி கொண்டிருக்கும் @ashwinravi99 ஐ தமிழ் வார்த்தை மூலம் Encourage செய்யும் @imVkohli & சக ?? வீரர்கள்?#INDvENG pic.twitter.com/utnNoELgdK
இந்நிலையில், இவரின் பந்து வீச்சை, இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, தமிழில் சொல்லி உற்சாகப்படுத்தியுள்ளது.
அதில், ஸ்டோக்ஸிற்கு, அஸ்வின் பந்து வீச, அதை ஸ்டோக்ஸ் தடுத்தாடினார். உடனே கோஹ்லி இது வெறலெவல் பவுலிங் என்று தமிழில் கூறி உற்சாகப்படுத்தினார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.