அறிமுக வீரரிடம் இப்படியா நடந்துகொள்வது? கோஹ்லியை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள் (வீடியோ)
இந்திய அணி வீரர் விராட் கோஹ்லி எதிரணி வீரர் சாம் கொன்ஸ்டாஸை ஸ்லெட்ஜிங் செய்ததை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மிரட்டிய கொன்ஸ்டாஸ்
மெல்போர்னில் நடந்து வரும் டெஸ்டில் அறிமுகமான சான் கொன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார்.
முன்னதாக விராட் கோஹ்லி, 19 வயது இளம் வீரரான கொன்ஸ்டாஸை இடித்து ஸ்லெட்ஜிங் செய்தார்.
Virat Kohli and Sam Konstas exchanged a heated moment on the MCG. #AUSvIND pic.twitter.com/QL13nZ9IGI
— cricket.com.au (@cricketcomau) December 26, 2024
மோசமான செயல்
இது ஆடுகளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நடுவர்கள், வீரர்கள் தலையிட்டு சமாதானம் செய்தனர்.
கோஹ்லி வேண்டுமென்றே இடித்துள்ளார் என்றும், அனுபவ வீரரான அவர் இளம்வீரரிடம் இப்படி நடந்துகொண்டது மோசமான செயல் என்றும் ரசிகர்கள் பலர் அவரை வசைபாடி வருகின்றனர்.
மேலும் கோஹ்லி, கொன்ஸ்டாஸ் இடையிலான மோதல் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |