உன் பந்தை இவருக்கு விளையாட தெரியல.. நியூசிலாந்து வீரரை சீண்டிய கோஹ்லி: கமெராவில் பதிவான காட்சி
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதி போட்டியில் இந்திய வீரர் கோஹ்லி ஸ்லெட்ஜிங் செய்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி இங்கிலாந்தில் கடந்த 18-ஆம் திகதி துவங்கியது. இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்க, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 146 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் இழப்புடன் விளையாடியது.
அதன் பின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
அதன் பின் ஆடிய நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது. அதன் படி இன்றைய நான்காம் நாள் ஆட்டமும் மழையால் பாதிக்க, போட்டி கிட்டத்தட்ட டிராவை நோக்கியே செல்கிறது.
— pant shirt fc (@pant_fc) June 20, 2021
இந்நிலையில், இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் துவக்க வீரரான டாம் லாதம் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்து வீசினார்.
அப்போது அவரது பந்தை எதிர் கொள்ள லாதம் திணறினார். உடனே கோஹ்லி, அவரை ஸ்லெட்ஜிங் செய்ய ஆரம்பித்தார் விராட் கோஹ்லி. அவரை வெறுப்பேற்றும் விதமாக, அவருக்கு விளையாடவே தெரியவில்லை.
நீ வீசும் பந்தை எப்படி பேட்டில் பட வைப்பது என்பதுகூட அவருக்கு தெரியாது என்று அவர் கூறினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.