சதத்தை தவறவிட்ட கோலி..பஞ்சாப் கிங்ஸிற்கு 242 ரன் இலக்கு நிர்ணயித்த RCB
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 242 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
கோலி ருத்ர தாண்டவம்
தரம்சாலா மைதானத்தில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
This took our tally to 1️⃣6️⃣0️⃣0️⃣ sixes in the IPL, and it just had to come off Virat’s willow ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #PBKSvRCB pic.twitter.com/iHkoPhRC89
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 9, 2024
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியில் ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ் 9 ஓட்டங்களிலும், வில் ஜாக்ஸ் 12 ஓட்டங்களிலும் காவேரிப்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
பட்டிடார் 55 ஓட்டங்கள் விளாசல்
அதன் பின்னர் கோலி, பட்டிடார் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த கூட்டணி ருத்ர தாண்டவமாடி ஓட்டங்களை சேர்த்தது. அதிரடியில் மிரட்டிய பட்டிடார் 23 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
9⃣2⃣ Runs
— IndianPremierLeague (@IPL) May 9, 2024
4⃣7⃣ Balls
7⃣ Fours
6⃣ Sixes
That was one dazzling knock in beautiful Dharamsala! ? ? #TATAIPL | #PBKSvRCB | @RCBTweets | @imVkohli
Relive Virat Kohli's brilliant innings ? ?
பின்னர் களமிறங்கிய கிரீனும் அதகளம் செய்தார். இதன்மூலம் ஜெட் வேகத்தில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. சரவெடியாக சிக்ஸர்களை பறக்கவிட்ட விராட் கோலி, 92 (47) ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தினை தவறவிட்டார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்து கிரீன் 45 (27) ஓட்டங்களும், தினேஷ் கார்த்திக் 18 (7) ஓட்டங்களும் விளாச, பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 241 ஓட்டங்கள் குவித்தது.
Innings Break!#RCB set a mountainous target of 2️⃣4️⃣2️⃣, courtesy of a top batting effort ?
— IndianPremierLeague (@IPL) May 9, 2024
Can #PBKS pull off this mammoth chase or will the visitors defend it? ?
Scorecard ▶️ https://t.co/49nk5rrUlp#TATAIPL | #PBKSvRCB pic.twitter.com/ggcPKr6bSX
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |