சிக்ஸர் என நினைத்த வீரர்.. கேட்ச் பிடித்து மிரள வைத்த கோலி.. வைரலாகும் வீடியோ
கம்மின்ஸின் கேட்சை அபாரமாக பிடித்த கோலியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது
இந்தப் போட்டியில் விராட் கோலி 19 ஓட்டங்கள் எடுத்ததுடன், இரண்டு கேட்சுகளை பிடித்து அசத்தினார்
அவுஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸின் கேட்சை விராட் கோலி பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்திய அணி பிரிஸ்பேனில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. வெற்றிப்பாதைக்கு சென்று கொண்டிருந்த அவுஸ்திரேலிய அணியின் கடைசி மூன்று விக்கெட்டுகளை 20வது ஓவரில் வீழ்ந்தன.
குறிப்பாக பேட் கம்மின்ஸின் அவுட் ஆன விதம் இந்திய ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. ஷமியின் ஓவரில் கம்மின்ஸ் ஸ்ட்ரெயிட் திசையில் அடித்த பந்து சிக்ஸரை நோக்கி செல்ல, எல்லையின் முன்பு நின்றிருந்த கோலி ஒற்றைக் கையால் அபாரமாக கேட்ச் பிடித்து மிரட்டினார்.
Australia dug out can't believe it ?? pic.twitter.com/hf6nhMM2Ic
— savage.32 (@perth__106) October 17, 2022
இதுதொடர்பான வீடியோவை கோலியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.