தோனி நரம்பில் பனி உருகி ஓடுகிறது: ஷேன் வாட்சன் கருத்து!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் தோனி மற்றும் கோலியின் ஆட்ட திறமையை ஒப்பீடு செய்து அவுஸ்திரிலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
IPL போட்டிகள் மூலம் தோனி தலைமையிலான சென்னை அணியிலும் , கோலி தலைமைலான பெங்களூரு அணியிலும் விளையாடியதன் அடிப்படையில் தோனி மற்றும் கோலி ஆகிய இருவரின் தலைமை பண்புகள் குறித்து, ஐசிசி கிரிக்கெட் நிர்வாகம் அவுஸ்திரிலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சனிடம் கருத்து கேட்டுள்ளது.
அதற்கு பதிலளித்து பேசியுள்ள ஷேன் வாட்சன், விராட் கோலி விராட் ஒரு தலைவராக, நம்பமுடியாத விஷயங்களைச் செய்வார் மற்றும் வீரர்களை உற்சாகப்படுத்துவதில் கோலி மிகுந்த வல்லவர் என தெரிவித்துள்ளார்.
என்னைப் பொறுத்தவரை, விராட் கோலி ஒரு சூப்பர்மேன் என்று நான் நம்புகிறேன், மேலும் அவரைச் சுற்றியுள்ள வீரரகளின் திறமையை வெளிக்கொண்டுவந்து அதை எப்படி பயன்படுத்துவது என்பது அவருக்குத் நன்கு தெரியும்.
களத்துக்கு வெளியே விராட் ஒரு நம்பமுடியாத நல்ல சமநிலையான நபர் மற்றும் அவரின் அறிவு மிகவும் கவர்ச்சிகரமானது. IPLலில் பெங்களூரு அணியில் விராட் கோலி தலைமைக்கு கீழ் பணியாற்றயது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.
தோனியை பொறுத்தவரை அவர் நரம்பில் பனி உருகி ஓடுகிறது, அதனால் தான் இவ்வளவு கூல்லாக அவரால் இருக்கமுடிகிறது.
அணியில் இருந்து அழுத்தத்தை நீக்குவதில் அவரது திறமை அபரிவிதமானது. மேலும் தோனி அவரது அணிவீரர்களை முழுவதுமாக நம்புவதால் அவரால் அவரது அணியை நல்லமுறையில் கொண்டுசெல்ல முடிகிறது.
மேலும் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா குறித்து அவர் பேசுகையில், அவர் மிகவும் இயல்பான மற்றும் எளிமையான கேப்டன் மற்றும் அவர் மும்பை அணியை வழிநடத்தும் அவரின் செயல்பாடு நம்பமுடியாத வகையில் சிறப்பாக அமைத்துள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.