இறுதிப் போட்டியில் சொதப்பிய ரிஷப் பாண்ட்டை விமர்சித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த கோஹ்லி
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான கோஹ்லி, இளம் வீரர் ரிஷப் பாண்ட் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு பின்னர், இந்திய அணியின் கேப்டன் ஆன கோஹ்லி எவ்வளவு விமர்சனத்திற்குள்ளானாரோ, அதே அளவிற்கு இளம் வீரர் ரிஷப் பாண்ட்டை இந்திய ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
ஏனெனில், இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்து கொண்டிருக்கும் போது, ரிஷப் பாண்ட் பொறுப்பை உணர்ந்து ஆடாமல், அதிரடியாக விளையாட நினைத்து அவுட் ஆகினார்.
இது குறித்து கோஹ்லி கூறுகையில், ரிஷப் பாண்ட் தனக்கு வய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அவருடைய திறமையை நிரூபித்துள்ளார். என்னைப் பொறுத்தவரை அவர் அணியின் சூழ்நிலையை நன்றாக உணர்ந்து கொண்டுதான் விளையாடுகிறார்.
சில நேரங்களில் அவர் விளையாடும் விதம் பலன் கொடுக்காது. அப்போதெல்லாம் அவரின்மேல் விமர்ச்சனங்கள் எழும். விளையாட்டில் இது எப்போதுமே நிகழும் ஒன்றுதான். அதற்காக நாங்கள் அவருடைய பேட்டிங் செயல்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று எந்த நிபந்தனையும் வைக்கப்போவதில்லை.
எதிரணியின் மீது அழுத்தம் கொடுப்பதற்ககாக, அவர் அப்படி விளையாடித்தான் ஆக வேண்டும். அதுதான் எங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கிறது. எதிர்காலத்தில் அவர் ஒரு சிறந்த வீரராக வருவார் என்று கூறியுள்ளார்.