இங்கிலாந்து நினைத்ததை செய்ய வைத்துவிட்டது! தோல்விக்கு இது தான் காரணம்: கோலி வேதனை
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி தோல்வி குறித்து, இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வியடைந்தது.
இது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், முதல் இன்னிங்ஸில் நாங்கள் குறைவான ரன்கள் அடித்ததால், அது எங்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் கடும் அழுத்ததை கொடுத்துவிட்டது.
ஏனெனில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஒரு பெரிய ஸ்கோரை எட்டிவிட்டது. இருப்பினும் நாங்கள் இரண்டாவது இன்னிங்ஸில், சில நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்தோம்.
இந்த மைதானம் நல்ல பேட்டிங் பிட்ச் தான். இருப்பினும் இங்கிலாந்து வீரர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி எங்களை தவறு செய்ய வைத்தனர். அவர்களது ஒழுக்கமான பந்துவீச்சு எங்களை தவறு செய்ய வைத்தது.
இதன் காரணமாகவே இன்றைய நாளில் பேட்டிங்கில் மிகுந்த தடுமாற்றத்தை சந்தித்தோம். எங்களுடைய அணியின் பேட்டிங் டெப்த் இல்லை என்று அனைவரும் சொல்கின்றனர்.
ஆனால் இந்திய அணியில் நல்ல பேட்டிங் ஆர்டர் இருக்கிறது. இருப்பினும் பின்வரிசையில் உள்ள மிடில் ஆர்டரில் நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்.
நாங்கள் நல்ல அணியிடம் தோற்று விட்டோம், அவர்கள் வெற்றி பெற தகுதியானவர்கள் என்று கூறியுள்ளார்.