பந்தை கேட்டு அவர் விக்கெட் எடுத்து கொடுத்தார்! அதுவே வெற்றிக்கு முக்கிய காரணம்: கோலி பேட்டி
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், வெற்றி குறித்து கோஹ்லி வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இப்போட்டியில், இந்திய அணி 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
இதனால் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், இப்போட்டி வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஆன கோஹ்லி கூறுகையில், ஒரு அணியாக இந்த போட்டியில் நாங்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினோம்.
இந்த வெற்றியை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மைதானம், பிளாட்டாக இருந்தது. அதன் பிறகு பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனதும் பவுலர்கள் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள்.
1️⃣0️⃣0️⃣ Test wickets for Bumrah! ?
— Sony Sports (@SonySportsIndia) September 6, 2021
He shatters the stumps and gets there in true Bumrah style!
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! ?#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #Bumrah #Pope pic.twitter.com/8CMDvdrevy
நிச்சயம் இறுதி நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருந்தது.
பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனதும் பும்ரா என்னிடம் வந்து பந்தை என்னிடம் கொடுங்கள் இனி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி பந்துவீசும் வாய்ப்பை கேட்டுப் பெற்றார். பிறகு அவர் எடுத்த அந்த இரண்டு விக்கெட்தான் போட்டியின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
ரோகித் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். எங்களது இந்த வெற்றி அனைவரின் வெற்றி ஆகும். மேலும் இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
இதனை அப்படியே இறுதிப் போட்டியிலும் காட்டுவோம் என்று கூறியுள்ளார்.