நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் இவர் தான் இந்திய கேப்டன்.. டெஸ்டில் கோலிக்கு ஓய்வு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட உள்ள வீரரின் விவரம் வெளியாகியுள்ளது.
இந்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நவம்பர் 17ம் திகதி ஜெய்பூரில் நடக்கவிருக்கிறது.
கோலி டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேசமயம், கோலி ஓய்வெடுக்கப்பட உள்ளதாகவுதம், அதானல் அவர் நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே, இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ராஹனே தொடருவார் என பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.