இப்போ ஊதுங்க பார்ப்போம்... Barmy Army-க்கு செம பதிலடி கொடுத்த கோலி! வைரலாகும் புகைப்படம்
இங்கிலாந்து அணியை வீழ்த்திய பின்பு, கோஹ்லி பதிலடி கொடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
50 ஆண்டுகளுக்கு பின், இந்திய அணி ஓவல் மைதானத்தில் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளதால், இது ஒரு வரலாற்று வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் இந்திய அணி தோற்றாலும் சரி, அல்லது ஏதேனும் தவறு செய்திருந்தால் சரி, அதை சீண்டும் வகையில், Barmy Army-யினர் நடந்து கொள்வர்.
குறிப்பாக, கோஹ்லி அவுட் ஆகி செல்லும் போது, பாய்...பாய் என்று செய்கை செய்வதுடன் கையில் ஊதுகுழல் வைத்து, வழியனுப்பது போன்று செய்கை செய்து வந்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று வெற்றி பெற்ற பின்பு எங்க இப்போ ஊதுங்க என்பது போல் கோஹ்லி அதே போன்று செய்கை காட்டினார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.