இங்கிலாந்து மண்ணில் இப்படி மட்டும் இல்லையென்றால் முதல் பந்திலே அவுட் தான்! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து கோஹ்லி எச்சரிக்கை
இந்திய அணியின் கேப்டன் ஆன கோஹ்லி, இங்கிலாந்து மண்ணில் உற்சாகமான மனநிலையோடு ஆட வேண்டும் என்று சக வீரர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜுன் 21-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி, இங்கிலாந்து சென்றுவிட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து புறப்படும் முன் கோஹ்லி, ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இந்திய அணியை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் அது மட்டுமே எனது மனதில் உள்ளது.
இந்த இங்கிலாந்து தொடரின்போது நியூசிலாந்து அணிக்கு இங்கிருக்கும் சூழல் நிச்சயம் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. ஆனாலும் நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என நான் நினைக்கவில்லை.
இங்கிலாந்திற்கு நாங்கள் செல்வது இது முதல் முறை கிடையாது. இங்கிலாந்து கிளைமேட் எங்களுக்கு நன்றாக தெரியும். இங்கு உள்ள சூழலை பழகிக்கொண்டு உற்சாகமான மனநிலையில் போட்டியை எதிர்கொள்ள வேண்டும்.
அப்படி உற்சாகமின்றி களமிறங்கினால் முதல் பந்திலேயே விக்கெட்டை இழப்பீர்கள் அல்லது பவுலராக இருந்தால் விக்கெட் வீழ்த்த தடுமாறுவீர்கள் எல்லாமே நமது மனநிலையை பொறுத்து தான். எனவே நல்ல உற்சாகமான மனநிலையுடன் போட்டியை ரசித்து விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.