வி.எஸ்.பாபு மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது- மு.க.ஸ்டாலின் இரங்கல்
TVK MLA V.S.Babu passed away- கொளத்தூர் தொகுதி தவெக. எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வி.எஸ்.பாபு மறைவு
கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு கடந்த செப்டம்பர் 9, 2026 முதல் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், 75 வயதான வி.எஸ்.பாபு மாரடைப்பு காரணமாக இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு முதல்வர் மற்றும் எதிர்க்கட்சிகள் உள்பட அரசியல் தலைவர்கள் இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது இரங்கல் பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் இரங்கல்
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) November 19, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |