சாக்கு மூட்டையில் இறந்து கிடந்த 7 வயது சிறுமி - போலீசார் மீது கல்வீச்சு... பற்றி எரியும் கொல்கத்தா
தெற்கு கொல்கத்தாவில் சாக்கு மூட்டைக்குள் இறந்த நிலையில் 7 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
சாக்கு மூட்டையில் இறந்து கிடந்த 7 வயது சிறுமி
நேற்று காலை தெற்கு கொல்கத்தாவில் உள்ள தில்ஜாலாவில் 7 வயது சிறுமி காணாமல் போனதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தில்ஜாலாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சாக்கு மூட்டைக்குள் இறந்த நிலையில் 7 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலை சம்பந்தமாக அச்சிறுமியின் பக்கத்து வீட்டாரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, இந்தக் கொலையின் பின்னணி குறித்து போலீசார் எந்தவிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
போலீசார் மீது கல் வீச்சு
கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து நகரின் முக்கிய மேம்பாலத்தில் இருந்த போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்து எரித்தனர். நேற்றிரவு போராட்டக்காரர்களால் பல போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
பற்றி எரியும் கொல்கத்தா
இன்று காலை முதல், போராட்டக்காரர்கள் தில்ஜாலாவில் பல சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்தக் கொலை தொடர்பாக ஒரு பெண் உட்பட 3 பேரை தற்போது கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
West Bengal | Locals protest against the State Government and Administration over the death of a 7-year-old girl, in Kolkata. pic.twitter.com/ia65jSDxBI
— ANI (@ANI) March 27, 2023
Kolkata is burning, again. Locals are protesting death of a 7 year old girl in Tiljala area of the city. Bengal Govt is trying to hush up the matter… How long will WB remain a mute spectator to death of young girls? Will Mamata Banerjee, as Home Minister, take responsibility? pic.twitter.com/JLcWfB724J
— Amit Malviya (@amitmalviya) March 27, 2023
Kolkata’s Tiljala area turns into a warzone after a 7 yr old girl was murdered by a neighbour. Several police vehicles vandalised, bikes torched. Tension prevails, heavy stone pelting. #westbengal
— Kumar Sahil (@KumarSahil30) March 27, 2023