டி காக் வெறியாட்டம்... நொந்து போன ராஜஸ்தான்: கதற விட்ட கொல்கத்தா
ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியில், கொல்கத்தா அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ரன் குவிப்பை தடுத்து
நாணய சுழற்சியின் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியின் துருவ் ஜோரேல் அதிகபட்சமாக 33 ஓட்டங்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் அணியின் வைபவ், ஹர்ஷித் ரானா, மோயின் அலி, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் குவிப்பை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, 152 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குவிண்டன் டிகாக், மோயின் அலி களமிறங்கினர். மோயின் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அணித்தலைவர் ரஹானே 18 ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து, அங்க்ரிஷ் ரகுவஞ்சியுடன் ஜோடி சேர்ந்த டிகாக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதிரடியாக ஆடிய டிகாக்
இறுதியில் கொல்கத்தா அணி 17.3 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்சை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றிபெற்றது.
கொல்கத்தா தரப்பில் அதிரடியாக ஆடிய குவிண்டன் டிகாக் 61 பந்துகளில் 97 ஓட்டங்களுடனும், 17 பந்துகளில் 22 ஓட்டங்கள் விளாசிய அங்க்ரிஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமலும் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட கொல்கத்தா அணி ராஜஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் தரவரிசையில் கொல்கத்தா 6வது இடத்தில் உள்ளது. தோல்வி மூலம் தரவரிசையில் ராஜஸ்தான் 10வது இடத்தில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |