பெங்களூரு அணியை மொத்தமாக நொறுக்கிய கொல்கத்தா அபார வெற்றி

Virat Kohli Kolkata Knight Riders Royal Challengers Bangalore IPL 2023
By Arbin Apr 06, 2023 06:16 PM GMT
Report

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.

ரஹ்மத்துல்லா குர்பாஸ் அரைசதம்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தெரிவு செய்தார்.

பெங்களூரு அணியை மொத்தமாக நொறுக்கிய கொல்கத்தா அபார வெற்றி | Kolkata Knight Riders Won By 81 Runs

இதனையடுத்து கொல்கத்தா முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் , ரஹ்மத்துல்லா குர்பாஸ் களமிறங்கினர். ஆனால் டேவிட் வில்லே பந்துவீச்சில் வெங்கடேஷ் ஐயர், மந்தீப் சிங் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கேப்டன் நிதிஸ் ராணா 1 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் ரஹ்மத்துல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு விரட்டிய அவர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 57 ஓட்டங்களில் கரண் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ரசல் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து இணைந்த ரிங்கு சிங் மற்றும் ஷர்துல் தாக்கூர் சிறப்பாகவிளையாடினர். ஷர்துல் தாக்கூர் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார்.

ஷர்துல் தாக்கூர் 20 பந்துகளில் அரைசதம்

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 46 ஓட்டங்களில் வெளியேறினார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் எடுத்தது.

பெங்களூரு அணியை மொத்தமாக நொறுக்கிய கொல்கத்தா அபார வெற்றி | Kolkata Knight Riders Won By 81 Runs

அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 29 பந்துகளில் 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெங்களூரு அணியின் சார்பில் வில்லி மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 205 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் சார்பில் விராட் கோலி மற்றும் கேப்டன் டூ பிளசிஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தினர்.

கொல்கத்தா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்

ஆனால் விராட் கோலி 21 ஓட்டங்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து டூ பிளசிஸ்(23), மேக்ஸ்வெல்(5), ஹர்சல் பட்டேல்(0), மிட்செல் பேரேஸ்வெல்(19), அனுஜ் ராவத்(1), தினேஷ் கார்த்திக்(9), கரண் சர்மா(1), ஆகாஷ் தீப்(17) ஓட்டங்கள் என எடுத்து கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

பெங்களூரு அணியை மொத்தமாக நொறுக்கிய கொல்கத்தா அபார வெற்றி | Kolkata Knight Riders Won By 81 Runs

இறுதியில் பெங்களூரு அணி 17.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகளும், சுயாஷ் சர்மா 3 விக்கெட்டுகளும், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாக்கூர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.

மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US