சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கணவர்: மனைவி மீது புகார்
இந்தியாவின் மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் அவரது மனைவி மீது புகார் தெரிவித்துள்ளனர்.
சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கணவர்
தெற்கு கொல்கத்தாவில் வசித்துவந்த சன்னி சிங்குக்கும் (34) அவரது மனைவியான புனிதாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதுண்டாம்.
திங்கட்கிழமை வழக்கம் போல தம்பதியருக்குள் சண்டை வர, மனைவியையும் மகளையும் வீட்டை விட்டு வெளியே துரத்தினாராம் சிங்.
அவர்கள் பொலிசாரை அழைத்ததைத் தொடர்ந்து அவர்களை வீட்டுக்குள் அனுமதித்துள்ளார் சிங்.
Partha paul
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சிங்கின் அறை பூட்டப்பட்டிருக்கவே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரது அறையைத் திறந்த புனிதா, தன் கணவரின் உயிரற்ற உடல் தொங்கிக்கொண்டிருப்பதைத்தான் காணமுடிந்துள்ளது.
பொலிசார் வந்து சிங்கின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியுள்ள நிலையில், சிங்கின் குடும்பத்தினர், அவரது மனைவியான புனிதாவும், அவரது சகோதரரான ராகேஷ் பஸ்வான் என்பவருமே சிங் மரணத்துக்குக் காரணம் என எழுத்து வடிவில் புகார் அளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கி நடத்திவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |