உடலை வலுப்படுத்தும் கொள்ளு- கருப்பு உளுந்து வடை: எப்படி தயாரிப்பது?
கிராமங்களில் அதிகம் செய்யப்படும் இந்த கொள்ளு- கருப்பு உளுந்து வடை சாப்பிடவே அவ்வளவு சுவையாக இருக்கும்.
கொள்ளும், கருப்பு உளுந்து நம் உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்குகின்றன.
அந்தவகையில், உடல் வலுவாக இருக்க கொள்ளு- கருப்பு உளுந்து வடை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொள்ளு - 200g
- கருப்பு உளுந்து - 50g - ஒரு ஸ்பூன்
- புதினா- சிறிதளவு
- கறிவேப்பிலை- சிறிதளவு
- கொத்தமல்லி- சிறிதளவு
- பச்சை மிளகாய் - 4
- சின்ன வெங்காயம் - ½ கப்
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- சோம்பு- ½ ஸ்பூன்
- எண்ணெய்- ½ லிட்டர்
செய்முறை
கருப்பு உளுந்து மற்றும் அரிசியை 3 முறை நன்கு கழுவி 1 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து கொள்ளை முளைகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த உளுந்து, அரிசி, முளைகட்டிய கொள்ளு,பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நீர் விடாது கெட்டியாக அரைக்க வேண்டும்.
பின் இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், சோம்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவுக் கலவையை வடைகளாகத் தட்டி, பொரித்து எடுத்தால் சுவையான கொள்ளு- கருப்பு உளுந்து வடை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |